அம்பேவெல வாவியில் 20 மரை சடலங்கள்! நடந்தது என்ன? (படங்கள்)

அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹோட்டன் தென்ன தேசிய சரணாலய பகுதியில் மான், மரை உள்ளிட்ட வன விலங்குகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படுகின்றன. இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட வேட்டை நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

தனி நபர்கள் மற்றும் சில குழுவினர் இணைந்து வன விலங்குகளை வேட்டையாடி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அப்பகுதிகளுக்கு வருபவர்கள் மான், மரை உள்ளிட்டவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

கூட்டமாக வரும் மான்களை, வேட்டை நாய்கள் துரத்திச்சென்று கொல்கின்றது, நாய்களுக்கு அஞ்சி ஓடும்போது சில மான்கள் வாவிக்குள் விழுகின்றன. அதன்பின்னர் அவற்றை வேட்டைக்காரர்கள் கைப்பற்றுகின்றனர். இப்படியான முறையிலேயே வேட்டை இடம்பெற்று வந்துள்ளது.

எனினும், கடந்த சில நாட்களாக வேட்டையர்கள் எவரும் வருவதில்லை எனவும், நாய்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளன எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், நாய்களின் வேட்டை விடவில்லை. அவை மரைகளை துரத்திச் செல்கின்றன. இதனால் வாவிக்குள் விழுந்து உயிரிழந்த மான்களே சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles