உக்ரைனில் போரில் இறந்த தன் தாய்க்கு 9 வயது குழந்தையொருவர் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனது அக்கடிதத்தில் அக்குழந்தை எழுதியிருப்பது, பின்வருமாறு,
“அம்மா… இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த அம்மா நீதான். உன்னை எப்போதும் நான் மறக்க மாட்டேன். இப்போது நீ சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பாயென நம்புகிறேன். வருங்காலத்தில் நீ சொல்லிக்கொடுத்த வழியில் வாழ்ந்து, நானும் நல்ல மனிதராக இருந்து சொர்க்கத்துக்கு வருவேன். உன்னை அங்கு சந்திக்கிறேன் அம்மா…!” என்று அக்குழந்தை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து வரும்நிலையில் உக்ரைனை சேர்ந்த குழந்தையொன்று தனது மறைந்த தாய்க்கு எழுதியுள்ள இக்கடிதம், பலரையும் நெகிழ்ச்சியாக்கியுள்ளது.