“அம்மா நான் ஆஸ்கார் விருது வென்றுவிட்டேன்” – கீ ஹூ குவான் உருக்கம்

” சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கீ ஹூ குவான், அம்மா, நான் ஆஸ்காரை வென்றுவிட்டேன்.” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகளவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் படத்திற்காக நடிகர் கீ ஹுங் குவான் தட்டிச்சென்றார்.

இவ்விருதை வென்றதும் அவர், “அம்மா நான் ஆஸ்கார் விருதை வென்றுவிட்டேன்” என உணர்ச்சி ததும்ப தனது உரையை தொடங்கினார்.

” எனது அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவர் இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார். அம்மா, நான் ஆஸ்கரை வென்று விட்டேன். என்னுடைய பயணம் ஒரு படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில்தான் ஓர் ஆண்டைக் கழித்தேன். தற்போது ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றுள்ளேன். இதைப் போன்ற நிகழ்வுகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.இதுதான் அமெரிக்கனின் கனவு. எனது தாய்க்கும் அவரது தியாகங்களுக்கும், எனது காதல் மனைவிக்கும் நன்றி என்றார் நா தழுதழுத்தபடி.

நடிகர் கீ ஹுங் குவான் இவ்வாறு பேசி முடித்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்த ஆண்டு அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என்கிற பெருமையை எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜேமி லீ கர்டிஸ் பெற்றார்.கீ ஹூ குவான் வியட்நாம் நாட்டில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே இவரது குடும்பம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ்க்கு குடிபெயர்ந்தது. ஆஸ்கர் விருதினை பெறும் ஆசிய வம்சாளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் இவர். இதற்கு முன்பு 1985 ஆம் ஆண்டு கம்போடியாவைச் சேர்ந்த ஹையிங் எஸ்.நகோர் என்பவர் தி கில்லிங் படத்திற்காக விருதினை பெற்றிருந்தார்.”

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles