அயோத்திக்கு இலங்கையில் இருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு அழைப்பு!

உத்தரப்பிரதேஷத்தின் அயோத்தியில் 2021 நவம்பர் 1 முதல் 5ஆம் திகதி வரை தீபோத்ஸவ் வில் பிரமாண்டமான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பங்கேற்க இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட கலாசாரக் குழு ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச அரசாங்கத்தால் அழைக்கப்பட்டுள்ளது.

இராமாயணத்தின் உலகளாவிய கலைக்களஞ்சியத்தின் இலங்கைப் பிரிவின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஞானகுமார் சிதம்பரம் மற்றும் திருமதி காயத்திரி சுவீந்திரன் ஆகியோரும் கொழும்பிலுள்ள, சுவாமி விவேகானந்தா கலாசார மையம் மற்றும் நாட்டிய கலா மந்திர் ஆகியவற்றின் புகழ்பெற்ற பரத நாட்டிய குருவான கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றனர்.

இக்கலாசாரக்குழுவினரின் பயணத்துக்கு முன்னதாக இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே அவர்கள் இக்குழுவினரை சந்தித்து உரையாடியிருந்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழைமையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இத்தகைய கலாசார மற்றும் ஆன்மீக தொடர்புகளின் முக்கியத்துவத்தை அவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார்.

அத்துடன், உத்தரப்பிரதேஷ அரசின் கலாசாரத் திணைக்களத்தின் அயோத்தி ஆராய்ச்சி நிறுவனம் இலங்கையிலிருந்து 15 பேர் கொண்ட இக்கலாசாரக் குழுவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேஷ மாநிலத்தில் புனித நதியான சரயுவின் கரையில் அயோத்தி அமைந்துள்ளது. இது இராமர் பிறந்த இடம் என நம்பப்படுவதால் இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் இங்கு பிரமாண்டமான ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

2017 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு தீபோத்ஸவ் என்ற விழாவினைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐந்தாவது தீபோத்ஸவ் பதிப்பின்போது, முதன்முறையாக 500 ட்ரோன்கள் அயோத்தியின் வானத்தில் இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கவுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமிருந்து வரும் கலாசாரக் குழுக்கள் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கலாசார நிகழ்ச்சிகளை இங்கு காட்சிப்படுத்துவார்கள். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் திகதியன்று 12 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்க உத்தரபிரதேஷ அரசு திட்டமிட்டுள்ளது.

அயோத்தியில் நடைபெறும் தீபோத்ஸவ் கொண்டாட்டங்களின் போது சரயு நதியின் கரையில் அமைந்திருக்கும் கம்பீரமான ‘ராம் கி பைதியில்’ பாரம்பரிய சுற்றுலா, மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, இராமாயண ஊர்வலம் புகைப்படக் கண்காட்சி, முப்பரிமாண ஒளிக்கீற்று காட்சிகள், திட்டபிரதிமைகளின் திரையிடல் மற்றும் லேசர் ஒளிக்கற்றை காட்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பப்பட்ட ஓர் அடையாள புனித சின்னம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி ஆலய தலைமை குருவிடம் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கௌரவ மிலிந்த மொரகொட அவர்களால் 2021 ஒக்டோபர் 28 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. இப்புனித சின்னம் இலங்கையில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திலிருந்து உயர் ஸ்தானிகரால் இந்தியாவிற்கு எடுத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

06. 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மங்களகரமான வப் போயா தினத்தன்று கொழும்பிலிருந்து புனித நகரமான குஷிநகருக்கு முதலாவது சர்வதேச விமானம் வந்தடைந்தமை இந்த சந்தர்ப்பத்தில் நினைவில்கொள்ளப்படவெண்டியதாகும். இலங்கையிலிருந்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழு இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

இக்குழுவில் 4 இராஜாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் புனித விகாரைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட பௌத்த மதகுருமாரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அதி வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினரும் உள்வாங்கப்பட்டிருந்தனர். இத்தகைய கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் மதங்களை கடந்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலையான மக்கள் – மக்கள் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles