அரசாங்கத்தை விரட்டுவதற்கான சமரை நாளை கொழும்பில் ஆரம்பிக்கிறது சஜித் அணி!

புதியபயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களைக் கொண்டுவந்து மக்களை அடக்கி ஆளும் இந்த ரணில் – ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் அணிதிரள வேண்டும். இதற்கான அரசியல் சமர் ஜனவரி 30 ஆம் திகதி (நாளை)
கொழும்பில் ஆரம்பமாகும்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரணில்- ராஜபக்ச ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இதனால் மக்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டங்களை முடக்குவதற்கு பொலிஸார் களமிறகப்படுகின்றனர். மறுபுறத்தில் நாடாளுமன்றத்தில் அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக புதிய பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. சர்வதேசமும் எதிர்த்துள்ளன.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அல்ல, நாட்டு மக்களையும், ஊடகங்களையும், அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்காகவுமே இப்படியான சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன. அடுத்து புனர்வாழ்வு சட்டமூலமும் ஆபத்தானது, அதுகூட அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படும்.

இவ்வாறு மக்களை அடக்கி ஆளும் இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles