விசாகப்பட்டினத்தில் 65 அடி உயர திரிசூலம்

ஆந்​திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​தில் சுற்றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள் மிக​வும் பிரசித்தி பெற்​றவை​யாகும். வார இறுதி நாட்​கள், பண்​டிகை நாட்கள் மற்​றும் கோடை விடு​முறை​யில் இங்கு அதிக சுற்​றுலாப் பயணி​களை காணலாம்.

இந்​நிலை​யில் இப்​பகு​தியை மேலும் அழகாக்க, விசாகப்​பட்​டினம் நகர வளர்ச்சி கழகம் (விஎம்​ஆர்​டிஏ) இங்கு 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் சிலை அமைக்க முடிவு செய்​தது. இதற்​கான பணி​கள் விரை​வாக நடை​பெற்​று, சமீபத்​தில் அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி திரிசூலத்தை பொது​மக்களின் பார்​வைக்கு கொண்டு வந்​தார். மலை உச்​சி​யில் உள்ள இந்த திரிசூலத்தை நகரில் எந்த இடத்​தில் இருந்​தும் காண முடியும்.

இரவில் எல்​இடி விளக்கு வெளிச்​சத்​தில் திரிசூலம் ஜொலிக்​கிறது. 65 அடி உயரம் கொண்ட திரிசூலத்​தில் உடுக்கை மட்​டும் 18 அடி அகல​மும், 10 அடி உயர​மும் கொண்​டுள்​ளது. ரோப்​-வே உள்ள இந்த மலைக்கு தற்​போது சுற்​றுலா பயணி​கள் அதி​கம் வர தொடங்கி விட்​டனர். சுமார் 8 மாத​மாக திரிசூலம் கட்​டு​மானப் பணி​கள் நடந்​தன. சமீபத்​தில் இதன் திறப்பு விழா நடந்து முடிந்துள்​ளது.

இது குறித்து ஆந்​திர கல்வி அமைச்​சர் நாரா லோகேஷ் நேற்று சமூக வலை​தளத்​தில், “குஜ​ராத்​தில் உள்ள சோம்​நாத் கோயில் புனரமைக்​கப்​பட்டு 75 ஆண்​டு​கள் நிறைவடைவதை நாம் கொண்டாடும் இந்த வேளை​யில், ஆந்​திர மாநிலம், விசாகப்பட்டினத்​தில் உள்ள கைலாசகிரி​யில் 65 அடி உயர திரிசூலம் அமைக்​கப்​பட்​டிருப்​பது ஆந்​தி​ரா​வுக்கு பெருமை தரும் விஷய​மாகும். இது நமது இந்​திய கலாச்​சா​ரத்​தை​யும், ஆன்மீகத்தை​யும் நாட்​டுக்கு எடுத்​துரைக்​கிறது” என்​று குறிப்பிட்டுள்​ளார்​.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles