தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர் எனவும், ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
அபே ஜனபல வேகய கட்சியின் தலைவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் வந்தவர்கள், காலை உணவை உண்பதற்காக, ஹோட்டலொன்றுக்கு சென்றிருந்தவேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










