“அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உள்ளார்”

” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” – என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணமல் தொடர்பில் எனக்கு முன்னர் உரையாற்றிய எம்.பி. (வினோ) குறிப்பிட்டிருந்தார். இது பற்றி முதலில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இனத்தின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படும் நபர் அல்லர். பிரச்சினைக்கு (இனப்பிரச்சினை) அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.

எனவே, மேற்படி நேர்காணலை அடிப்படையாகக்கொண்டு சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதி முற்படுகின்றார் எனக் கூறுவது தவறாகும். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles