அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் முழுப்பணத்தில் சரி பாதி 48.8 சதவீதம் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு வழங்கப்படுவதாக பேராதனை மற்றும் ருஹுனு பல்கலைக்கழகங்களின் மூன்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வருடாந்தம் 69,491 கோடி ரூபா ஒதுக்கப்படுகிறது. இதன்படி இந்தப் பணத்தில் 33,940 கோடி ரூபா பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றுபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக செலவிடப்படுகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான மற்றும் புள்ளிவிவர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்து கோறள தலைமையில் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மற்றும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நந்தசிரி கிஹிம்பியஹெட்டி ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இத்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கு அடுத்தபடியாக சம்பளம் வழங்குவதற்காக பெருந்தொகை பணம் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்படுகின்றது. அத்தொகை 11800 கோடியாகும்.
