அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும், நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே ஈரான் முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா தனது சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றினால் மட்டுமே ஈரானும் தனது கடப்பாடுகளை மதித்துச் செயற்படும் என்று கூறினார்.

“எதிர் தரப்பு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்” என்று கூறிய பகாய், தற்காலிக உடன்படிக்கையின்படி அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதை அடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான தனது கடப்பாடுகளை ஈரான் கைவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles