அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா

பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் இன்று  நவராத்திரி பூசை வழிபாடு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இவ்வழிபாடுகள் கொவிட் 19 தொடர்பான சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறவுள்ளன.

இப்பூசை வழிபாடுகளில் விசேட விருந்தினராக இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி பங்குபற்றுவார் என இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles