ஹோர்டன் சமவெளி செல்லும் முக்கிய வீதிக்கு ரூ.791.68 மில்லியன் மேம்பாட்டு திட்டம்!

பிளாக்பூல்–அம்பேவெல–பட்டிப்பொல–ஹோர்டன் சமவெளி B512 வீதியின் ஒரு பகுதியை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025 நவம்பர் இறுதியில் ஏற்பட்ட Ditwah சூறாவளியால் சேதமடைந்த, 5+200 கிலோமீற்றர் முதல் 12+000 கிலோமீற்றர் வரையான வீதிப் பகுதியே இந்தத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக தேசிய போட்டித்தன்மை கொண்ட கேள்விப்பத்திர நடைமுறையின் கீழ் நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

அவற்றை மதிப்பீடு செய்த உயர்மட்ட கொள்முதல் குழு, தகுதியான குறைந்த விலை முன்மொழிவை சமர்ப்பித்த M/S Asset Engineering (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்க பரிந்துரைத்துள்ளது.

வீதியை மேம்படுத்தும் பணிகளுக்கான மொத்த செலவு வரி தவிர்த்து ரூ.791.68 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles