இணையத்தின் மூலம் நடைபெறும் “Sextortion” எனப்படும் பாலியல் உள்ளடக்க மிரட்டல் மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு – SLCERT பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, பணம், மேலும் புகைப்படங்கள் அல்லது பாலியல் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுப்பதே Sextortion எனப்படுகிறது.
இத்தகைய மோசடிகள் பெரியவர்களை மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களையும் பாதிக்கக்கூடும்.
பொதுவாக social media, messaging apps, dating platforms மற்றும் online games மூலமாக மோசடிக்காரர்கள் முதலில் தொடர்பை ஏற்படுத்துகின்றனர்.
பின்னர் காதல் தொடர்பு அல்லது நண்பர் போல நடித்து நம்பிக்கையைப் பெறுகின்றனர். அதன் பின்னர் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பெற்றுக்கொண்டு மிரட்டலை ஆரம்பிக்கின்றனர்.
SLCERT வழங்கும் முக்கிய ஆலோசனைகள்:
இணையத்தில் அறிமுகமில்லாதவர்களை எளிதில் நம்ப வேண்டாம்.
ஒருவர் அனுப்பும் புகைப்படம் அவருடைய உண்மையான அடையாளத்திற்கான ஆதாரம் அல்ல.
தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான படங்களை பகிர்வதற்கு முன் மிகவும் கவனமாக இருக்கவும்.
மிரட்டல் ஆரம்பித்தால் உடனடியாக தொடர்பை நிறுத்தவும்.
Block செய்வதற்கு முன் chats, screenshots உள்ளிட்ட ஆதாரங்களை பாதுகாத்துக் கொள்ளவும்.
சம்பந்தப்பட்ட account-ஐ report செய்து உடனடியாக உதவி பெறவும்.
மேலும், AI Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான அந்தரங்கப் படங்களை உருவாக்கியும் மிரட்டல்கள் மேற்கொள்ளப்படலாம் என SLCERT எச்சரித்துள்ளது.
எனவே, இணையத்தில் நீங்கள் பகிரும் ஒவ்வொரு தகவலிலும் எச்சரிக்கையாக இருங்கள்.
மிரட்டலுக்கு பயப்படாமல் — ஆதாரங்களை பாதுகாத்து, உடனடியாக புகார் செய்யுங்கள்.










