பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இதொகாவின் தேசிய சபை ஓரிரு நாட்களுக்குள் கூடவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இதொகா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று கூட்டணி அமைத்து சிலிண்டனர் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையிலேயே இறுதி முடிவெடுப்பதற்காக இதொகாவின் தேசிய சபை கூடவுள்ளது.