இந்தியாவுக்கு எதிரான இரண்டவாது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1–1 என சமநிலைக்குக் கொண்டுவந்தது.
அடிலெயிட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நேற்று (08) மூன்றாவது நாளில் வெறுமனே 19 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவ இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதன் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களுக்கு சுருண்டதோடு அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் டிரவிஸ் ஹெட்டின் சதத்துடன் (140) 337 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் 175 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் அவுஸ்ரேலியாவுக்கு சவாலான இலக்கு ஒன்றை நிர்ணயிக்கத் தவறியது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி பிரிஸ்பானில் ஆரம்பமாகவுள்ளது.