ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 13 பேர் பலி! 300 பேர்வரை காயம்!!

ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு (21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

6.5 மக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் டெல்லி, ஶ்ரீநகர் மற்றும்  காஷ்மீரில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பாகிஸ்தானில் சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது.

Related Articles

Latest Articles