பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கவே முடியாது என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அத்துடன், சம்பள நிர்ணய சபைக்கு சென்றால் அங்கு குறைந்தபட்ச சம்பளமே நிர்ணயிக்கப்படும் என்று மேற்படி சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
” அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கமுடியாது. ஆனாலும் ஆயிரம் ரூபாவரை சம்பளம் பெறக்கூடிய மூன்று திட்டங்களை நாம் வழங்கினோம். அதன்மூலம் இலகுவில் ஆயிரம் ரூபாவை பெறலாம். எனினும், அதனை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நியூஸ்பெஸ்ட்டுக்கு ரொஷான் ராஜதுரை வழங்கிய நேர்காணல்….