” மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், மக்களுக்காக கண்ட கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனைமுன்னிட்டு கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ரமேஷ் ,
” தலைவரின் பிறந்தநாளன்று அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமை. கல்விக்கு முன்னுரிமை வழங்குமாறு வலியுறுத்துவார். அந்தவகையில் அவர் காட்டிய வழியில் இம்முறையும் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குகின்றோம்.
எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். எமது தலைவரின் கனவுகளை நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம்.” – என்றார்.










