மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான மின்சாரப் பாவனையாளர்களின் மின் விநியோகம், துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே, கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களின் மின்சாரமே துண்டிக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அந்த கட்டணங்களை செலுத்துவது எதிர்காலத்தில் மேலும் குறையலாமென உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.










