பொகவந்தலாவ, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவிலிருந்து பெண் சிசுவொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பகுதியில் மரக்கறி தோட்டமொன்றில் வேலைசெய்துகொண்டிருந்த நபரொருவர், சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டு, பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரனைகளை முன்னெடுத்தனர்.
மீட்கப்பட்ட சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்
