சுயநல நோக்கில் கோரிக்கைகளை முன்வைக்கும் அமெரிக்கா: ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமற்றது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ரெசா மொஹ்செனி சானி Mohammad Reza Mohseni Sani தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது சுயநல நோக்கங்களுக்காகவும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாலுமே குழப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மற்றும் அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நிலவும் நெருக்கடியான நிலை காரணமாக அடுத்தகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்பில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். *

Related Articles

Latest Articles