ஆஸ்கார் விழாவில் நாட்டு… நாட்டு பாடல்

2024 வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் பாடல் இந்த விழாவை அலங்கரித்தது.

பிரபல நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடனம் ஆடும் நாட்டு.. நாட்டு… பாடல் ஒளிபரப்பாகி ஆஸ்கார் விழாவை சிறப்பித்தது.

ஏற்கனவே 2023- ம் ஆண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு.. நாட்டு… பாடல் பெற்றிருந்தது. இதன் மூலம் இந்திய பாடலுக்கு பெருமை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த ஆண்டும் ஆஸ்கார் விழாவில் இந்த பாடல் காட்சிகள் திரையில் காட்டப்பட்டது இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்ப்பது போல் அமைந்திருந்தது.தற்போது இது தொடர்பான ‘வீடியோ ‘எக்ஸ்’ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Latest Articles