ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் கண் சிகிச்சை அலகுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.
அத்துடன், சுகாதாரப் பணியாளர்களின் திறன் விருத்திக்கு உதவி வழங்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய பதுளை வைத்தியசாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் களுபோவில போன்ற போதனா மருத்துவமனைகள் மற்றும் தங்காலை ஆதார வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைக்குத் தேவையான நவீன வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கண் சிகிச்சை அலகுகளில் கண் சுகாதார ஊழியர்களின் திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கும்,
மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கருத்திட்டத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபா கிடைக்கப் பெறவுள்ளது.
