மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 3 ஆவது மாடி கட்டிட தொகுதியில் குளவி கூடுகள் காணப்படுவதால் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகள் அச்சத்துக்கு மத்தியிலேயே சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
அத்துடன் வைத்தியசாலையில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர். குளவிகள் வந்துவிடும் என்ற பயத்தில் யன்னல்களைக்கூட அவர்கள் திறப்பதில்லை எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் மலையக குருவி ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்தது. அப்போது ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் குளவிக்கூடுகளை அகற்றுவதற்கு இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குளவி கூடுகள் கலைந்து நோயாளிகளை கொத்தவதற்கு முன்னர் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்