‘இது நொண்டி அரசாங்கம் – காங்கிரசுக்கும் முதுகெலும்பில்லை’ – விளாசித் தள்ளும் வேலுகுமார்

” முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த அரசாங்கம் நொண்டி அரசாங்கம். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாமல், கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் 2015 இல் முன்கூட்டியே தேர்தலை நடத்திவிட்டு நாட்டைவிட்டு ஓடிய அரசாங்கம். அன்று இருந்த நிலைமைதான் இன்றும் இருக்கின்றது.

அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர் இன்று நிதி அமைச்சர். அன்று ஜனாதிபதியாக இருந்தவர் இன்று பிரதமர். எனவே, இவர்களுக்கு நாட்டை நிர்வகிக்க முடியாது. அதானால்தான் நாட்டுமக்கள்மீது சுமைகளை திணிக்கின்றனர்.

இன்று எமது தோட்டத்திலுள்ள தாய்மார் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறைசோறு திண்ணும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு முதுகெலும்பில்லை. எமது தாய்மாருக்காக போராடுவோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles