இது முடிவல்ல – ஆரம்பப்புள்ளி! மனதை தளரவிட வேண்டாம்!!

2020 இல் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற  மாணவர்களுக்கு பிரதமரின் இணைப்பு  செயலாள்ர் செந்தில்  தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
” மாணவர்களுடைய வெற்றிக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும்  இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கொவிட்- 19 தொற்று காலப்பகுதியில் கல்வி நடவடிக்கையை சரியான முறையில் தொடர முடியாமல் இருந்த சூழ்நிலையிலும், கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி,  விடாமுயற்சியுடன்  செயற்பட்டு  அர்ப்பணிப்பும் கடின உழைப்புக்கும்  கிடைத்த  வெற்றியாக பெறுபேறுகள் அமைந்துள்ளன.
உங்களுடைய வெற்றி உங்கள் பாடசாலை மாணவர்களுக்க்கு  ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எனவே  கல்வித்துறையில் உங்களுடைய நாட்டம்  இத்தோடு நின்று விடாது பல்கலைக்கழகம் செல்லும் வரை விடா முயற்சியுடன் செயற்பட்டு  சாதனை புரிய  வேண்டும்.
அதே போல இப்பரீட்சையில்  ஆர்வத்தோடு தோற்றி  வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால்  வெற்றி பெற முடியாமல் போன மாணவர்களுக்கும்  இது ஒரு முடிவு அல்ல. இதுவே ஆரம்ப புள்ளி. எனவே மனந்தளராமல் உங்கள்  முயற்சியை கைவிடாது தொடர்ந்தும்  கல்வி நடவடிக்கைகளிளும்   அடுத்து எதிர்கொள்ள உள்ள பரீட்சையிலும்   கவனத்தை முழுமையாக செலுத்தி  பல சாதனைகளை படைக்க வேண்டும்” – என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles