நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தோட்டவாரியாக இ.தொ.காவின் சில தலைவர், தலைவிமார்களை மாற்றம் செய்வதற்காக கட்சி தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
இ.தொ.காவின் உயர்மட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற பெறும்வாரியான முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த திடீர் மாற்றம் இடம்பெறவுள்ளது.
மக்களுக்கு சிறந்த அரசியல், தொழிற்சங்க சேவையை வழங்கும் நோக்கிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.