மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.