இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தனது இராஜதந்திரப் பணிக்காலத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்பவுள்ள சந்தோஷ் ஜாவுக்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
சந்தோஷ் ஜா இலங்கைக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










