இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி

உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 41 ஆக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாகராஜின் சில பகுதிகளிலும் 14 பேர் தனித்தனியான மின்னல் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர்.

கான்பூர் தேஹத் மற்றும் பதேபூரில் தலா ஐந்து பேரும், கவுசாம்பியில் நான்கு பேரும், பிரோசாபாத்தில் மூன்று பேரும், உன்னாவ், ஹமீர்பூர் மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். கான்பூர் நகரில் தலா இரண்டு பேர் இறந்தனர், பிரதாப்கர் ஹர்தோய் மற்றும் மிர்சாபூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில், ஏழு பேர் கோட்டா மற்றும் தோல்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள். 11 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள்.மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா ஒருவர் ஜலாவர் மற்றும் பரானைச் சேர்ந்தவர்.

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதால் 20 பேர் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles