அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்
.
வியட்நாமின் டீன் டீயம் மாதிரியான ஆட்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு முயற்சி செய்தால் அதனைத் தடுப்பதற்கு இராணுவம் மற்றும் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.










