இனவாத அரசியலுக்கு முடிவு: தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும்!

தனது அரசியல் இருப்பு இல்லாமல்போய்விடும் என்ற அச்சம் வடக்கிலுள்ள பாரம்பரியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசியல் இருப்புக்காக அத்தரப்புகள் வெளியிடும் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் வடக்கு மக்களை நாம் முழுமையாக நம்புகின்றோம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

” புலிகள் அமைப்பு மீண்டெழக்கூடும் என தேர்தல் காலங்களில் கருத்துகள் முன்வைக்கப்படும். புலிகளின் ஆயுதம் பற்றியும் பேசப்படுகின்றது. நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளீர்கள். அவ்வாறானதொரு அச்சுறுத்தல் உள்ளதா.” என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்

” தமிழ் மக்கள் இரண்டு, மூன்று தடவைகள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். புலிகளின் சித்தாந்தம் – கருத்தியலுடன் தாம் இல்லை என்ற செய்தியை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அவர்கள் வழங்கியுள்ளனர். இது வடக்கில் இருந்து தெற்குக்கு வழங்கப்பட்ட செய்தியாகும்.

எனவே, சில அரசியல் வாதிகளின் கருத்துகளை கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் இனவாத அரசியலிலேயே அவர்களின் இருப்பு தங்கியுள்ளது. இனவாத ரீதியில் மக்களை பிரித்தால்தான் அவர்களால் அவர்களுக்குரிய இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் பாரம்பரியக் கட்சிகளை நிராகரித்தனர். இந்நிலைமை தொடர்ந்தால் தமது இருப்புக்கு ஆபத்து என்ற அச்சம் வடக்கில் உள்ள பாரம்பரியக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரத்துக்காக வெளியிடப்படும் கருத்துகள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

நாம் வடக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.
இனவாத அரசியல் மற்றும் அடிப்படைவாதத்தக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும். ” – என்று அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்

Related Articles

Latest Articles