இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அத்துடன், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 230 ரூபாவரை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக இன்றிரவு 8 மணிக்கு பதில் நிதி அமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தலைமையில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.










