கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் ஹொரனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 212 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, இன்று மாத்திரம் 524 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
