இப்ப நல்லமா? செல்வந்தி எங்கே?

“பிரபாகரனையே கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. முடிந்தால் 30 நாட்களுக்குள் அவரை கைது செய்யவும்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய செவ்வந்தி என்ற யுவதி நாட்டைவிட்டு செல்லவில்லை, இங்குதான் இருக்கின்றார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார்.

இலங்கையென்பது சிறிய நாடு. பிரபாகரனையே கண்டுபிடிக்க முடிந்தது எனில், செவ்வந்தியை ஏன் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது?

பொதுமக்கள் அமைச்சருக்கு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்குகின்றோம். அவரை கைது செய்து காட்டுங்கள்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியை கொண்டு சென்றமை, துப்பாக்கி தாரிக்கு பயிற்சி அளித்தமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட செவ்வந்தியே பிரதான சூத்திரதாரி. அவர் கைது செய்யப்பட வேண்டும்.

நாட்டில் இன்று நாளாந்தம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles