மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு: ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது.

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் ஊர்காவற்றுறை பொலிஸில் பதிவு செய்திருந்தனர்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் சார்பாக பூர்ணி மரியநாயகம் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி), த.செல்வக்குமார் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர்), சுவாமிநாதன் பிரகலாதன் (வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles