இலங்கை ரயில் சேவை மின்மயமாகிறது – $1.878 பில்லியன் டொலர் செலவில் மூன்று ஆண்டு திட்டம்

இலங்கை முழுவதும் ரயில் சேவையை மின்மயமாக்குவதற்காக 1,878 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மின்மயமாக்கல் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மின்மயமாக்கப்படவுள்ள முக்கிய ரயில் பாதைகளில் மருதானை – ராகம ரயில் பாதையும் ஒன்றாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ரயில் சேவையை மின்மயமாக்குவதன் மூலம் நாட்டின் ரயில் போக்குவரத்து கட்டமைப்பை நவீனப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இது அமையவுள்ளது.

Related Articles

Latest Articles