இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது – திகா கடும் கண்டனம்

இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்ட சம்பவம் மிலேச்சத்தனமானது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்த பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின்கீழ் இருக்கும் வெள்ளந்துர தோட்டத்தில் ஒரு குடியிப்பாளரின் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிலேச்சத்தனமானது. இது பெருந்தோட்ட கம்பனிகளின் சர்வாதிகார போக்கினையும், அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகிறது.

மாத்தளை ரத்வத்த தோட்டத்தில் அசம்பாவிதம் நடந்து ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது அரச கட்டுபாட்டுக்குள் பெருந்தோட்ட கம்பனிகள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

200 வருடங்கள் அல்ல 300 வருடங்களானாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட போவதில்லை. அவர்களின் கடும்போக்கும் மாறப்போவதுமில்லை.

அரசாங்கமும் இவாறான சம்பவங்கள் இடம்பெறும்போது வேடிக்கையாளர்களாக இருக்கின்றதே தவிர உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாத்தளை ரத்வத்தை சம்பவத்திற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இவ்வாறு இடம்பெற்றிருக்காது.

தொடந்தும் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles