ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.
மாலைதீவிலிருந்து சிங்கபூர் சென்ற பின்னர் குறித்த கடிதத்தை அவர் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்று இந்த தகவலை உறுதிப்படுத்தி, செய்தி வெளியிட்டுள்ளது.










