கிளிநொச்சி மாவட்டம், திருவையாறுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது ட்ரோன் கமரா பறக்க விட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறும்படம் ஒன்றைத் தயாரிப்பதற்காகவே ட்ரோன் கமராவைப் பறக்க விட்டார் எனவும், வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் கைதான இளைஞன் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இது தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
