நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, குலீகொடை, ரொன்னதூவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, பாணந்துறை, பிங்வத்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிங்வத்த மயானத்திற்கு அருகில் இன்று(28) காலை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
