நாட்டில் இன்று அதிகாலை இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் எழுவர் பலியாகியுள்ளனர்.
இதன்படி கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்றும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்று சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்தவர்களே பலியாகியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
மினி பஸ்ஸொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மூவர் காயமடைந்துள்ளனர்.
