இரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,” புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழு தற்போது கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலத்தை அக்குழுவினர் கையளிப்பார்கள். அதன்பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

அதேவேளை, தான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாவது வருடம் முடிவடைவதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்று உறுதிமொழியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles