இலங்கைத் தொடருக்கான இந்திய அணி தலைவராக தவான்

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு தவான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கிடையில் இந்திய அணி இலங்கை சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா இல்லாததால் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

1. ஷிகர் தவான் (தலைவர் ), 2. புவனேஷ்வர் குமார் (துணைத் தலைவர் ), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்யகுமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்ட்யா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.

Paid Ad
Previous article4 வயது சிறுவனுக்கு ‘பியர்’ வழங்கிய இளைஞன் கைது (Video)
Next articleநிவாரண நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர்கான்