இலங்கையின் அடுத்த இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க?

இலங்கையின் 25ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்படவுள்ளார் என அரச உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவைகால நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

அத்துடன், மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

எனினும், சஞ்சய வனசிங்கவுக்கு சேவைகால நீடிப்பை வழங்கி, விகும் லியனகேவிற்கு பின்னர் அவரை இராணுவ தளபதியாக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.

சஞ்சய வனசிங்க தமது பதவி காலத்துக்குள் எவ்வித ஒழுக்க மீறல்களிலும் ஈடுபடாமல் சிறந்த சேவையை வழங்கியுள்ளதாலேயே அவருக்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்படவுள்ளது.

மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெமில்டன் வனசிங்கவின் மூத்த மகனுமாவார்.

சஞ்சய் வனசிங்க இராணுவத் தளபதியானால் அது உலக சாதனையாக அமையலாம் என இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தையும், மகனும் இராணுவ தளபதியாக எங்கும் பதவி வகித்தில்லை எனக் கூறப்படுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles