இலங்கையின் நெருக்கடி நிலை; நாளாந்தம் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித்தவித்துவரும் நிலையில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல் போன்ற பாரிய சம்பவங்களுடன் சிறு திருட்டு உட்பட நாளாந்தம் 100 சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles