இலங்கையில் நாளை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

