இலங்கை-ஜப்பான் வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானிய அமைச்சருடன் இன்று கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தியதாக அமைச்சர்அலி சப்ரி தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் மேம்பாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.

75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக ஜப்பான் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகே இலங்கை வந்தடைந்துள்ளார்.

Related Articles

Latest Articles