இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதலமைச்சர் எடுத்து வரும் முயற்சி புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக திகாம்பரம் தெரிவிப்பு

இலங்கை தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உதவிகளாக வழங்குவது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்து வரும் முயற்சியும் தொடர்ச்சியான கரிசனையும் தமிழ் மக்களுக்கான உலகளவு தலைமைத்துவம் குறித்து புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க ஏற்கனவே மத்திய அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழக சட்டசபையில் இது தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்வந்துள்ள தமிழக முதலமைச்சரின் இதயசுத்தியுடனான மனப்பாங்கு மிகவும் போற்றத்தக்கதாகும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா 15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

அத்துடன் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதனையும் நாம் வரவேற்கிறோம்.

தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் அறிவித்துள்ள இந்த உதவிகளை இலங்கைக்கு கிடைக்கச் செய்ய இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பழனி திகாம்பரம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles