இலங்கை மின்சார சபையை எட்டாகப் பிரிப்பது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை!

இலங்கை மின்சார சபை எட்டு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்படும் என்ற கூற்றை நிராகரித்த அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த, அவ்வாறான விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எவரும் பொய்யான அனுமானங்களைச் செய்ய வேண்டாம் எனவும்  அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையை எட்டு பிரிவுகளாகப் பிரிக்கும் ஆணை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அமைச்சரவையில் அத்தகைய விடயம் விவாதிக்கப்படவில்லை. சில ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை எட்டு அலகுகளாகப் பிரிக்கப்படும் என்று நீங்கள் ஊகங்களைச் செய்ய முடியாது,” என்றும்  அவர் கூறினார்.

மேலும் , மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாளை பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles